அசாமில் உச்சக்கட்ட பதற்றம்..ஆக்கிரமிப்பை மீட்கும்போது திடீர் வன்முறை.. போலீசார் சுட்டதில் இருவர் பலி

3 months ago 7

For Quick Alerts

Subscribe Now  

For Quick Alerts

ALLOW NOTIFICATIONS  

bredcrumb

Published: Friday, September 24, 2021, 0:15 [IST]

Google Oneindia Tamil News

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஆக்கிரமிப்பை மீட்கச் சென்ற போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போர் கொல்லப்பட்டனர்.

அசாம் மாநிலத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு அதில் community farmingஐ மேற்கொள்ளும் புதியதொரு திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள்

இந்தத் திட்டத்திற்காக மாநிலத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை அகற்றும் பணிகளில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக சிபாஜ்ஹார் என்ற பகுதியில் கடந்த திங்கள்கிழமை சுமார் 4500 பிகா நிலத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்த 800 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

திடீர் மோதல்

திடீர் மோதல்

இந்நிலையில், சிபாஜ்ஹார் பகுதியில் மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அம்மாநில அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் இன்று மதியம் 12.30 மணியளவில் அங்குச் சென்றுள்ளனர். அவர்களைப் பார்த்ததும் முதலில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவர்கள், திடீரென போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நிலைமையை சாமாக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் போலீசார் சுட்டதில் 2 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 9 போலீசார் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், உயிரிழப்புகளை இதுவரை போலீசார் உறுதி செய்யவில்லை.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

இந்தச் சம்பவம் தொடர்பாக இணையத்தில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் போலீசார் தரப்பில் அழைத்துச் செல்லப்பட்ட புகைப்படக்காரர் ஒருவரைப் போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் தடியைக் கொண்டு துரத்தி வருகிறார். புகைப்படக்காரர் போலீசாரை நோக்கி வர, அந்த பழங்குடியினரும் அவரை பின்தொடர்ந்து வருகிறார். உடனடியாக அந்த நபரைச் சூழ்ந்துகொண்ட போலீசார், அவர் மீது தடிகளால் தாக்குகின்றனர். மேலும், துப்பாக்கியால் சுடுகின்றனர். இந்தச் சம்பத்தில் துப்பாக்கிக் குண்டு நெஞ்சில் பாய்ந்ததில் அந்த நபரின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஒருவர் கைது

ஒருவர் கைது

அவர் அசைவற்று இருக்கும்போது, அந்த புகைப்படக்காரர் அவரை கலால் எட்டி உதைக்கிறார். மேலும், அவரை கொடூரமாகத் தாக்குகிறார். இவை அனைத்தும் வைரலாக பரவும் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதற்கு இணையத்தில் பெரும் கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த சம்பவத்தை ஆவணப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்ட புகைப்படக்காரர் பிஜய் சங்கர் பனியா கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தி தாக்கு

ராகுல் காந்தி தாக்கு

இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகக் காங்கிரஸின் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "அசாம் அரசின் ஆதரவுடனேயே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மாநிலத்தில் உள்ள பொதுமக்களுடன் நான் நிற்கிறேன். இந்தியாவில் எங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது" எனப் பதிவிட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு அசாம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பூபேன் குமார் போராடவும் கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளி மாநில அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

பின்னணி என்ன

பின்னணி என்ன

அசாம் மாநிலத்தின் தர்ராங் மாவட்டத்தில் உள்ள தோல்பூர் கோருகுட்டி கிராமத்தில் தான் அரசு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன், இது சிவா கோயிலுக்குச் சொந்தமான இடம் என்று அரசு தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் இந்த இடத்தில் மீட்கும் நடவடிக்கையைக் கடந்த ஜூன் மாதம் முதல் அம்மாநில அரசு எடுத்து வருகிறது. 49 இஸ்லாமியக் குடும்பங்கள், ஒரு முஸ்லீம் குடும்பம் என மொத்தம் 50 குடும்பங்கள் இதுவரை வெளியேற்றப்பட்டதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இதை முற்றிலுமாக மறுத்துள்ள உள்ளூர் மக்கள் மொத்தம் 900 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அதில் 20,000க்கு மேற்பட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary

At least two protesters were killed during clashes between police and locals in Assam. Assam encroachment latest news.

Story first published: Friday, September 24, 2021, 0:15 [IST]

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்

Enable

x

Read Entire Article