அடுத்த 40 ஆண்டுகளுக்கு அமைதியான ஆட்சிக்கு என்ன செய்ய வேண்டும்? தலிபான்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் யோசனை

1 month ago 8

செய்திப்பிரிவு

Published : 16 Sep 2021 21:54 pm

Updated : 16 Sep 2021 21:54 pm

Published : 16 Sep 2021 09:54 PM
Last Updated : 16 Sep 2021 09:54 PM

afghanistan-could-have-peace-after-40-years-imran-khan

ஆப்கானிஸ்தானில் அடுத்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியான முறையில் ஆட்சி நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தலிபான்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் யோசனை தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடிய தலிபான்கள் வசம் தற்போது ஆப்கானிஸ்தான் வந்துவிட்டது. அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியவுடன் ஆப்கானிஸ்தானை தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி காபூல் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் வெளியேறியது குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகின. இறுதியாக அஷ்ரப் கனி குடும்பத்தினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்ததும் உறுதியானது.

இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் வசம் வந்தது. அதன்பின்னர் 70க்கும் மேற்பட்டோர் கொண்ட இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அடுத்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியான முறையில் ஆட்சி நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தலிபான்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் யோசனை தெரிவித்துள்ளார்.

சிஎன்என் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது:

இப்போது ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்களின் கைகளில் உள்ளது. இப்போது அவர்கள் மனதுவைத்து அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து அனைவரையும் உள்ளடக்கிய ஓர் ஆட்சியைக் கொடுத்தால் அடுத்த 40 ஆண்டுகளுக்கு நாட்டில் அமைதி நிச்சயமாக நிலவும். ஆனால், இதில் ஏதேனும் சறுக்கல் ஏற்பட்டால் பெரிய குழப்பத்துக்கு வழிவகுக்கும். கூடவே உலகின் மிகப்பெரிய மனிதநேய நெருக்கடி ஏற்படும், அகதிகள் பிரச்சினை உருவெடுக்கும்.

ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமையை உறுதி செய்ய வெளியில் இருந்து யாரேனும் வருவார்கள் என நினைப்பது தவறு. ஆப்கன் பெண்கள் இயல்பாகவே மிகவும் உறுதியானவர்கள். அவர்களுக்கான நேரத்தை அவர்களுக்குக் கொடுங்கள். அவர்களே உரிமைகளைப் பெற்றுக் கொள்வார்கள். ஒரு சமூகத்தில் பெண்கள் தங்களின் செயல்திறனை நிரூபிக்க அத்தனை வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு இம்ரான் கான் கூறினார்.

தவறவிடாதீர்!

 ஆஸ்திரேலியா முதுகில் குத்திவிட்டது; நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது: பிரான்ஸ்  தடுப்பூசி போடாவிட்டால் வேலையில்லை; கெடுபிடி காட்டும் பிரான்ஸ் அரசு: பட்டினி போராட்டத்தில் குதித்த முன்களப் பணியாளர்  நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம்; எங்களுக்குள் எந்த கோஷ்டிப் பூசலும் இல்லை: தலிபான்கள்  ஆப்கனில் மனிதாபிமான உதவிகளைத் தாராளமாகச் செய்யலாம்: ஐ.நா.வுக்கு தலிபான் பச்சைக்கொடி
Read Entire Article