அப்படியே, இந்த அரசின் பதவிக்காலம் முடியும் வரை கொண்டு சென்று விடுவர் போலிருக்கிறதே...

4 months ago 3

'நீட்' தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யும் தீர்மானத்தை சட்டசபை கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே அறிமுகம் செய்திருக்க முடியும். நீட் தேர்வு முடிந்த அடுத்த நாள் அதை கொண்டு வந்தால் தான், 'அடுத்த ஆண்டு நீக்குவோம்' என்று உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்ய முடியும் என தமிழக அரசு நினைக்கிறது.

- தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

'அப்படியே, இந்த அரசின் பதவிக்காலம் முடியும் வரை கொண்டு சென்று விடுவர் போலிருக்கிறதே...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி மற்றும் மகள், திருவண்ணாமலை கோவிலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்று வழிபட்டுள்ளனர். தன் குடும்பத்தினரை கட்டுப்படுத்த முடியாத ஸ்டாலின், எதற்காக ஹிந்து மக்களை தடுக்க பார்க்கிறார்?

- பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி

'கேள்வி எல்லாம் சரி தான். அவர் வீட்டில் உள்ள பிறராவது உண்மையை அறிந்து கொண்டனரே என திருப்திபட்டுக் கொள்ள வேண்டியது தான்...' என கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை.

'பெகாசஸ்' உளவுச்செயலி பிரச்னையில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு மறுத்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் தன் மேற்பார்வையில் விசாரணை ஆணையத்தை அமைத்து, இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிகுமார்

latest tamil news

'பெகாசஸ் உளவு பிரச்னைக்கு பின் பல விவகாரங்கள் வந்து விட்டனவே; இன்னமும் அதை பிடித்துக் கொண்டுள்ளீர்களே...' என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிகுமார் அறிக்கை.

'நீட்' தேர்வு பயத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்தார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். இந்த தேர்வை அரசியலாக பார்க்காமல் மாணவர்களின் உயிரையும், எதிர்காலத்தையும் கருதி, ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

- தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்

'நீட் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அரசியல் கட்சிகள் விலகிக் கொள்வது தான் நிரந்தர தீர்வாக இருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை.

'நீட்' தேர்வு திணிப்பின் காரணமாக, விலைமதிப்பில்லாத மாணவச் செல்வங்களின் இழப்பு தொடர்கிறது. இத்தகைய துயரங்கள், இனியும் தொடர நாம் அனுமதிக்க முடியாது. இனியாவது மோடி அரசு மனித தன்மையற்ற தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

- மாநில மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன்

'இதில் மோடி அரசின் பங்கு என்ன இருக்கிறது... 'நீட் உண்டு; மாணவர்களே அதற்காக படியுங்கள்...' என, மாநில அரசு சொல்ல வேண்டியது தான்...' என கூறத் தோன்றும் வகையில், மாநில மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.

Read Entire Article