\"அவள் உன் பெயரை சுமப்பாள்\".. காபூலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரருக்கு பிறந்த குழந்தை.. உருக்கமான கதை

1 month ago 11

For Quick Alerts

Subscribe Now  

For Quick Alerts

ALLOW NOTIFICATIONS  

bredcrumb

Updated: Friday, September 17, 2021, 16:43 [IST]

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் ஒருவரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த அமெரிக்க வீரரின் மனைவி தனக்கு பிறந்த குழந்தை குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான் ஆட்சியை பிடித்த பின் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அங்கு அமெரிக்க படைகள் கடைசி கட்ட மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்த போது இந்த கொடூர குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் இந்த காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

அமெரிக்க படைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த தாக்குதலை அந்த அமைப்பு நடந்தி உள்ளது. இதில் மொத்த 190 பேர் வரை பலியானார்கள். அதோடு 13 அமெரிக்க வீரர்களும் இந்த கொடூர தாக்குதலில் பலியானார்கள்.

அதெல்லாம் பெரிய வித்தையில்லை, ரெய்டு நடக்குது.. கவனமா இருங்க.. செல்லூர் ராஜூவை கிண்டல் செய்த பிடிஆர் அதெல்லாம் பெரிய வித்தையில்லை, ரெய்டு நடக்குது.. கவனமா இருங்க.. செல்லூர் ராஜூவை கிண்டல் செய்த பிடிஆர்

 கொலை

கொலை

இந்த தாக்குதலில் பலியானவர்களில் அமெரிக்காவை சேர்ந்த 20 வயது மரைன் வீரர் ரைலி மெக்குலம் ஒருவர். இவர் அந்த வாரம் அமெரிக்கா திரும்புவதாக இருந்தது. 26ம் தேதி குண்டு வெடித்த நிலையில் 31ம் தேதி தனது காதல் மனைவியை பார்க்க அவர் அமெரிக்கா திரும்புவதாக இருந்தது. ஆனால் ரைலி மெக்குலம் அந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பரிதாபமாக பலியானார். இவரின் உடல் மட்டுமே பெட்டியில் நாடு திரும்பியது.

கர்ப்பம்

கர்ப்பம்

இவர் இந்த தாக்குதலில் பலியான போது அவரின் மனைவி ஜியென்னா காரிடன் அமெரிக்காவில் கர்ப்பமாக இருந்தார். ஜியென்னா காரிடன் அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தனது கணவன் இறந்த செய்தி கேட்டு துடிதுடித்து போன ஜியென்னா பேஸ்புக்கில் இரண்டு நாட்களுக்கு பின் உருக்கமான போஸ்ட் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அதில், நான் என் கணவரை, என் நல்ல நண்பனை இழந்துவிட்டேன். என்னை இதைவிட வேறு ஒரு விஷயம் கொடுமையாக பாதிக்க முடியாது. நான் சந்திக்கும் இந்த வலியை எதை கொண்டும் சரி செய்ய முடியாது.

வருத்தம்

வருத்தம்

என்னுடன் உறுதுணையாக இருக்கும் எல்லோருக்கும் நன்றி. என் மீது அக்கறையை பொழியும் மக்களுக்கு நன்றி. இது போன்ற விஷயங்கள்தான் என்னை உயிர்ப்புடன் வைத்து இருக்கிறது. எனக்கு குழந்தை பிறக்க போகிறது. ரைலி மெக்குலமை என் கணவர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவர் இந்த உலகில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் உயிரோடு இருந்திருந்தால், அவர்தான் உலகில் மிக சிறந்த அப்பாவாக இருந்திருப்பார் என்று அந்த பெண் குறிப்பிட்டு இருந்தார். இந்த உருக்கமான போஸ்ட் பெரிய அளவில் வைரலானது. இந்த நிலையில்தான் தற்போது ஜியென்னாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பெண் குழந்தை

பெண் குழந்தை

இந்த நிலையில் தனது பெண் குழந்தைக்கு இறந்த கணவரின் பெயரை வைத்து புதிய பெயர் சூட்டி உள்ளார் ஜியென்னா. லேவி ரைலி ரோஸ் மெக்குலம் என்று அந்த பெண் குழந்தைக்கு பெயர் சூட்டி உள்ளார். இந்த குழந்தையின் புகைப்படம் தற்போது இணையம் முழுக்க தற்போது பரவி வருகிறது. அப்பாவின் பெயரை நீ சுமந்து செல்வாய் மகளே.. அவருக்கு இனி மரணம் இல்லை என்று மக்கள் பலர் அந்த அழகு குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து ட்வீட் செய்து வருகிறார்கள்.

உடல்நிலை


அமெரிக்காவில் மரைன் மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. கடும் மன உளைச்சலில் இருந்த அந்த பெண் தற்போது பாதுகாப்பாக குழந்தையை பெற்றுள்ளார். அவர் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரின் உடல்நிலை மற்றும் மனநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

English summary

Newborn baby named after her US marine father who killed in Kabul bomb blast attack.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்

Enable

x

Read Entire Article