ஆட்டம் ஆரம்பம்.. இந்தியரை துப்பாக்கி முனையில் கடத்திய தாலிபான்கள்.. காபூலில் அட்டகாசம்.. பரபரப்பு

4 months ago 6

For Quick Alerts

Subscribe Now  

For Quick Alerts

ALLOW NOTIFICATIONS  

bredcrumb

Published: Thursday, September 16, 2021, 11:30 [IST]

Google Oneindia Tamil News

காபூல்: இந்தியர் ஒருவரை ஆப்கானியர்கள், துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஒருவாரத்தில் அசுரவேகத்தில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்களால், 3 வாரங்களாகியும் ஆட்சியமைக்க முடியாமல் திணறி கொண்டிருந்தனர்..

இறுதியில் அது கூடி வந்த நிலையில், அடுத்தடுத்த அதிரடிகளையும் பிறப்பித்து வருகின்றனர். தற்போது, தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு சூழல் நிச்சயமற்றதாக மாறியிருக்கிறது...

கே.சி. வீரமணி வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்.. போலீஸாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு! கே.சி. வீரமணி வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்.. போலீஸாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

 அச்சுறுத்தல்கள்

அச்சுறுத்தல்கள்

காரணம், பெண்கள் மீதான தாக்குதல்கள் நடந்து கொண்டுதானிருக்கிறது.. முன்னாள் அரசுத்துறை ஊழியர்கள், ராணுவத்தினர், ஆப்கன் அல்லாதவர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

 கடத்தல்

கடத்தல்

தினம் ஒரு உத்தரவு... தினம் ஒரு அறிவிப்பு என்று அந்த மக்களை நிலைகுலைய வைத்து வருகிறார்கள் ஆப்கன்கள்.. முன்னாள் நீதிபதிகளே உயிரை கையில் பிடித்து கொண்டு தப்பித்து ஓடும் சூழல் ஏற்பட்டுவிட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. ஆப்கானில் வசித்து வரும் இந்திய பூர்வீகம் கொண்ட இந்து ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்தி விட்டார்களாம்..

 துப்பாக்கி முனை

துப்பாக்கி முனை

காபூலின் 11வது போலீஸ் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பன்சிரி லால் அரெண்டா.. இவருக்கு 50 வயதாகிறது.. அங்கேயே ஒரு மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார்.. இவர் ஒரு ஆப்கன் வம்சாவளியை சேர்ந்த இந்தியர் ஆவார்... இவரைதான் கடத்தி உள்ளனர்.

 மருந்து கடை

மருந்து கடை

இந்து மதத்தை சேர்ந்தவர் இவர்.. நைட் 8 மணிக்கு தன்னுடைய கடையில் இருந்துள்ளார்... அப்போது தன்னுடைய கடை ஊழியர்களுடன் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென துப்பாக்கிகளுடன் சிலர் வந்திருக்கிறார்கள்.. பன்சிரி லாலையும், கடை ஊழியர்களையும் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர்... கடத்தப்பட்ட பன்சிரி லாலின் குடும்பத்தினர் டெல்லி அருகேயுள்ள பரீதாபாத் பகுதியில் வசித்து வருபவராம்..

 துப்பாக்கி முனை

துப்பாக்கி முனை

இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் பன்சிரி லால் கடத்தப்பட்டது குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து அவரை தேடும்பணியும் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், பன்சிரி லால் கடத்தப்பட்ட நிலையில், அந்த கடை ஊழியர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி வந்துவிட்டதாக தெரிகிறது.. ஆனாலும் அவர்களை மனசாட்சியே இல்லாமல் கடத்தல்காரர்கள் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது..

 நடவடிக்கை

நடவடிக்கை

இந்நிலையில், இந்த கடத்தல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆப்கனில் உள்ள சீக்கிய இந்து அமைப்பினர் தெரிவித்ததாக இந்திய உலக போரம் அமைப்பின் தலைவர் புனீத் சிங் சந்தோக் இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளாராம்.. உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கடத்தப்பட்ட இந்தியரை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary

Taliban: Afghan origin Indian national abducted at gunpoint

Story first published: Thursday, September 16, 2021, 11:30 [IST]

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்

Enable

x

Read Entire Article