ஆப்கன் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கலாம்: ஜி20 மாநாட்டில் சீனா சிபாரிசு

3 months ago 15

ஏஎன்ஐ

Published : 23 Sep 2021 18:57 pm

Updated : 23 Sep 2021 18:57 pm

Published : 23 Sep 2021 06:57 PM
Last Updated : 23 Sep 2021 06:57 PM

at-g20-meeting-china-urges-lifting-economic-sanctions-on-afghanistan

ஆப்கானிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கலாம் என்று ஜி20 மாநாட்டில் சீனா சிபாரிசு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைத்துள்ளனர். முல்லா ஹசன் அகுந்த் பிரதமராகவும், முல்லா பரதார் துணைப் பிரதமராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். ஆண்கள் மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைந்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. தலிபான் ஆட்சிக்கு அஞ்சி பெரும்பாலான நாடுகள் ஆப்கன் மீதான கொள்கையைத் தெரிவிக்காமல் மவுனம் காக்கின்றனர். அண்டைநாடான பாகிஸ்தான், அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ரஷ்யா, தலிபான்கள் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நட்புக்கான சமிக்ஞைகளைக் கடத்தியுள்ளது. தலிபான்களோ தங்களின் தேசத்தை மீள் கட்டமைக்க சீனா மற்றும் ரஷ்ய நிதியையே நம்பியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பேசிய வெளியுறவு அமைச்சர் வாங் யி, "ஆப்கனின் அந்நியச் செலாவணி அந்நாட்டின் சொத்து. அது அவர்களுக்கே சேர வேண்டும். ஆப்கன் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகள் ஆப்கன் அரசை அங்கீகரிக்க வேண்டும். ஆப்கனின் வெளிநாட்டு நிதி ஆதாரங்களை முடக்கி வைத்து அந்த நாட்டுக்கு அரசியல் அழுத்தம் தரக்கூடாது. அவர்களின் நிதியை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடாது. ஆப்கன் மக்களுக்காக கூடுதலாக நிதியுதவி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தான் நெருக்கடியில் இருக்கிறது. அதன் நெருக்கடி காலத்தில் மிக அவசரமானத் தேவைகளுக்கு நிதியை விடுவிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் நிலவும் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

அதேவேளையில், ஆப்கானிஸ்தானும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளையும் கட்டுப்படுத்தி தனது வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஆப்கானிஸ்தான் தலைவர்களுடன் சீன, ரஷ்ய, பாகிஸ்தான் சிறப்புத் தூதர்கள் சந்தித்துப் பேசினர். இந்தச் சூழலில் தற்போது சீனா ஆதரவுக் குரல் கொடுத்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகமானது, ஆப்கானிஸ்தானின் அமைதி, வளத்திற்காக, பிராந்திய வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக சில ஆக்கபூர்வமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது என்று ஸ்புட்னிக் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தவறவிடாதீர்!

 பாகிஸ்தானுடனான நட்பைத் துண்டிக்கும் நேரம் வந்துவிட்டது: அமெரிக்காவுக்கு உள்நாட்டு ஊடகங்கள் வலியுறுத்தல்  காபூல் பல்கலைக்கழகம்: பிஎச்டி படித்த துணைவேந்தரை நீக்கி அப்பதவியில் பி.ஏ. படித்தவரை அமரவைத்த தலிபான்கள்  சூடானில் கனமழை, வெள்ளம்: தற்காலிக வீடுகளையும் இழந்து தவிக்கும் அகதிகள்  தலிபான் ஆட்சியின் கோர முகத்தைக் காணும் ஆப்கன் மக்கள்
Read Entire Article