இரும்புச்சத்து நிறைந்த கோங்குரா தொக்கு

4 months ago 3

இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் நிறைந்த புளிச்சக்கீரையை சாப்பிடுவதால் இரத்தம் தூய்மை அடையும். பித்தம் உடலில் அதிகமாகி, நாவில் சுவையின்மை பிரச்சனை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்சனை நீங்கும்.

தேவையான பொருட்கள் :

கோங்குரா (புளிச்ச கீரை) - 2 கட்டு
கடலைப்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 20
புளி - எலுமிச்சை அளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோங்குரா (புளிச்ச கீரை) இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.

இதை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு வரும் பதம் வரை வதக்கவும். கோங்குரா ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

இறுதியாகப் முதலில் அரைத்தவற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கிவிடவும்.

சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் இந்தத் தொக்கு ஜோராக இருக்கும்.

Read Entire Article