கனவான அமைச்சர் பதவி; எம்.பி வேட்பாளராக்கிய `திருமதி முதன்மை’ - ராஜேஸ்குமார் தேர்வானது எப்படி?

4 months ago 2

திமுக தலைமை அறிவித்துள்ள ராஜ்யசபா எம்.பி வேட்பாளர் லிஸ்ட்டில், நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் ராஜேஸ்குமார் இடம்பெற்றிருப்பது, நாமக்கல் மாவட்ட திமுக-வினரை புருவம் உயர்த்தவைத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்தலில் நின்று வென்று, அமைச்சராக ஆகக் கனவு கண்ட அவருக்கு, அப்போது 'கோஷ்டி அரசியல்' அமளியால் சீட் தரப்படவில்லை. அப்போது கலைந்த அவரின் பதவிக் கனவு, இப்போது திமுக-வின் `திருமதி முதன்மை’ மூலம், ராஜ்யசபா எம்.பி வேட்பாளராகி, பலித்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

நாமக்கல்

நாமக்கல் நா.ராஜமுருகன்

இது குறித்து, நம்மிடம் பேசிய, நாமக்கல் மாவட்ட தி.மு.க முக்கியப் புள்ளிகள் சிலர்,

``ஒரு நிதி நிறுவனத்தில் சில ஆயிரம் சம்பளத்துக்கு வேலை செய்தவர் ராஜேஸ்குமார். மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோருக்கு ராஜேஸ்குமாரின் தாத்தா கே.ஆர்.இராமசாமி மிக நெருங்கிய நண்பர். அந்த அடிப்படையில், கட்சிக்குள் வந்த அவர், வந்த வேகத்திலேயே இளைஞரணிப் பொறுப்புக்கு முயன்றார். அப்போது, மத்திய இணை அமைச்சராக இருந்த காந்திச்செல்வன், இதற்கு முட்டுக்கட்டை போட்டார். இருந்தாலும், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், அப்போது மாவட்டப் பொறுப்பாளராக இருந்த பார் இளங்கோவன்தான், ராஜேஸ்குமாருக்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பதவிக்கு சிபாரிசு செய்தார். திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா, அவ்வப்போது நாமக்கல்லிலுள்ள ஆஞ்சநேயர், நரசிம்மர் உள்ளிட்ட கோயில்களுக்கு வருவது வழக்கம்.

காந்திச்செல்வன்

காந்திச்செல்வன்நா.ராஜமுருகன்

அப்படி அவர் வரும்போதெல்லாம், துர்காவுக்குத் தேவையான உதவிகளை ராஜேஸ்குமார் செய்தவதோடு, 'அண்ணி' என்று துர்காவை அழைத்து, அவரது மனதில் இடம்பிடித்தார். நாமக்கல் மாவட்டத்தில் காந்திச்செல்வன், பார் இளங்கோவனை மீறி வளர்வது கடினம் என்பதால், துர்கா மூலமாக, `திருமதி முதன்மை’ அரசியல்' செய்தார். பலன், அவர் எதிர்பார்த்ததுபோலவே, கடந்த 2011-ம் ஆண்டு மாவட்ட இளைஞரணிப் பொறுப்பும் ராஜேஸ்குமாரைத் தேடிவந்தது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சர்ச்சைக்குரிய நிறுவனத்தோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அவர்களின் உதவியோடுதான், மாவட்டத்தில் அனைத்து நிகழ்ச்சிகளையும் படாடோபமாக நடத்த ஆரம்பித்ததாகச் சொல்லப்பட்டது. லட்சக்கணக்கில் பலரும் உதவிகளை வாரி வழங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 பெண் பக்தை மீட்பு விவகாரம்; இரு தரப்பிலும் வழக்கு பதிவு, கைது! - நடந்தது என்ன?

இந்தநிலையில், 16 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக இருந்த காந்திச்செல்வன் மீது ஏகப்பட்ட புகார்கள் பறந்தன. அதன் காரணமாக, காந்திச்செல்வன் வசமிருந்த நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து, அவரது எதிர்த்தரப்பான கழகத் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக இருந்த பார் இளங்கோவனிடம் அளித்தனர். இரண்டே ஆண்டுகளில் கட்சித் தலைமையைச் சரிகட்டிய காந்திச்செல்வன், மாவட்டச் செயலாளர் ஆனார். ஆனால், மாவட்ட திமுக-வில் கோஷ்டிப்பூசல் அமளிதுமளியாக, துர்கா ஸ்டாலின் ஆதரவாளரான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வசம் மாவட்டப் பொறுப்பாளர் பதவி தேடி வந்தது.

'மாவட்டப் பொறுப்பாளர் ஆனால் போதுமா... அமைச்சராக வேண்டாமா?' என்ற கனவில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கேட்டார். 'நாமக்கல் தொகுதியில் நின்றால், காந்திச்செல்வனும், பார் இளங்கோவனும் தனது வெற்றிக்குக் குழிபறிப்பார்கள்' என்று நினைத்து, திருச்செங்கோடு தொகுதியைக் குறிவைத்தார். ஆனால், அந்தத் தொகுதி கூட்டணிக் கட்சித் தலைவரான 'கொங்கு' ஈஸ்வரனுக்கு ஒதுக்கப்பட, வேறு வழியில்லாமல், 'நாமக்கல்லில் நிற்கிறேன்' என்று தலைமையிடம் `திருமதி முதன்மை’ மூலம் சீட் பெற முயன்றார். ஆனால், ஐபேக் டீம், 'காந்திச்செல்வன், ராஜேஸ்குமார், பார் இளங்கோவன் என்று இந்த மூன்று பேரில் யாருக்கு சீட் கொடுத்தாலும், பரஸ்பரம் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் குழிபறிப்பார்கள். அதனால், பொதுவான நபருக்குக் கொடுங்க' என்று 'நோட்' போட்டது.

பார் இளங்கோவன்

பார் இளங்கோவன் நா.ராஜமுருகன்

அதைத் தொடர்ந்து, எல்லோருக்கும் பொதுவானவராக இருந்த, திமுக-வின் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளரான ராமலிங்கத்துக்குக் கொடுத்தனர். ஆனால், அவரின் வெற்றிக்கு மூன்று பேரும் மெனக்கடவில்லை. எதிர்கட்சிக் வேட்பாளர் மீதுள்ள அதிருப்தியால் ராமலிங்கம் ஜெயித்தார். அதேபோல், கிழக்கு மாவட்டத்தில் வரும் சேந்தமங்கலம் தொகுதியில், அ.தி.மு.க-வில் சீட் கிடைக்கவில்லை என்று, கடந்த ஆட்சியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த சந்திரசேகரன் சுயேச்சையாகக் களமிறங்கியதால், தி.மு.க வேட்பாளரான பொன்னுச்சாமி எளிதாக ஜெயித்தார். அதேபோல், மற்றொரு தொகுதியான ராசிபுரத்தில் கடந்த ஆட்சியில் ஜெயித்து, அமைச்சராக இருந்த சரோஜா மீதிருக்கும் அதிருப்தியாலும், அந்தத் தொகுதியில் நின்ற திமுக வேட்பாளர், இளைஞர், மருத்துவர் என்ற அடிப்படையிலும் மதிவேந்தன் வெற்றிப்பெற்றார். ஆனால், 'எனது உழைப்பால்தான், நாமக்கல் கிழக்கு மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளும் தி.மு.க வசமாகின' என்று தலைமையிடம் ராஜேஸ்குமார் சொல்லிக்கொண்டாராம்.

`அண்ணி' அரசியல்... இணையும் கரங்கள்... தகிக்கும் நாமக்கல் தி.மு.க!

இந்தநிலையில், மதிவேந்தனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி கொடுக்க, `ஆஹா, அடுத்த எதிரியா?' என்று ராஜேஸ்குமார் தரப்பு ஆடிப்போனது. இதனால், நாமக்கல்லில் தங்கியிருந்த மதிவேந்தனை, ராசிபுரத்தில் போய் தங்கும்படி ராஜேஸ்குமார் தரப்பு அழுத்தம் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. அதற்காக, அமைச்சர் ராசிபுரத்தில் வீடு பார்த்ததாகக்கூடச் சொல்லப்பட்டது. ஆனால், அதன் பிறகு, அரசு நிகழ்ச்சிகளில்கூட, மக்கள் பிரதிநிதியாக இல்லாத ராஜேஸ்குமாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. அந்த நிகழ்ச்சிகளில், 'நன்கொடையாளர்' என்ற குறிப்போடு அவரது பெயரே முன்னிலைப்படுத்தப்பட்டது. ராஜேஸ்குமாரின் நெருக்கடியைத் தாங்க முடியாத அமைச்சர், 'எனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம். சைரன் வைத்த கார் எல்லாம் வேண்டாம்' என்று தனது ஆதரவாளர்களிடம் புலம்பியதாக, நாமக்கல் மாவட்ட தி.மு.க-வினர் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.

`வெளிநாடுவாழ் தமிழர்களின் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை!’  - மாநிலங்களவை எம்.பி அப்துல்லா

இந்தநிலையில், `திருமதி முதன்மை’ மூலம், அழுத்தம் கொடுத்து அமைச்சரையும் தனக்குச் சார்பானவராக மாற்றிக்கொண்டார். சமீபத்தில், சட்டமன்றத்தில் நடைபெற்ற சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய மதிவேந்தன், 'நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும், மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் ராஜேஸ்குமார், தானே வேட்பாளராகக் கருதி, மிகக் கடுமையாக உழைத்து, அவரின் அன்பாலும் ஆற்றலாலும் மாவட்டத்தை தி.மு.க வசமாக்கியிருக்கிறார். என்னை என்றும் வழிநடத்தி செல்லும் அவருக்கு, நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்று பேசினார். இதைப் பார்த்த மதிவேந்தன் ஆதரவாளர்களே குழம்பிப் போனார்கள்.

ராஜேஸ்குமார்

ராஜேஸ்குமார்நா.ராஜமுருகன்

ஆனால், அவர்களின் குழப்பத்துக்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக-வில் கோலோச்சிய வீரபாண்டி ஆறுமுகத்தை காலி செய்வதற்காக, கலைஞரால் வளர்த்துவிடப்பட்ட கே.கே.வீரப்பனையே காலி செய்து, நாமக்கல் மாவட்ட திமுக-வில் பலம் பொருந்திய மனிதரானவர் காந்திச்செல்வன். ஆனால், அவரையே அசால்ட்டாக காலி செய்து, இப்போது கோலோச்சும் ராஜேஸ்குமாரை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்துதான், அமைச்சர் மதிவேந்தன் சரண்டாகிவிட்டார்" என்றார்கள்.

இது குறித்து, ராஜேஸ்குமார் தரப்பில் பேசினோம்.

``16 வருடங்கள் நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருந்தார் காந்திச்செல்வன். ஆனால், அவர் பதவியில் இருந்த, 2016 சட்டமன்றத் தேர்தலில் பரமத்தி வேலூர் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் திமுக-வால் வெற்றிபெற்றுத் தர முடியவில்லை. ஆனால், ராஜேஸ்குமார், கடந்த சட்டமன்றத் தேர்தலில், தான் மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் நாமக்கல் கிழக்கு மாவட்டத்திலுள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக-வை ஜெயிக்கவைத்தார். இதன் மூலம், 'கொங்கு மண்டலத்தில் 100 சதவிகிதம் திமுக-வை ஜெயிக்கவைத்த மாவட்ட பொறுப்பாளர்' என்று இவருக்கு தலைமையிடம் பெயர் கிடைத்தது. அதற்குப் பரிசுதான், இந்த ராஜ்யசபா வேட்பாளராக ஆக்கப்பட்டது. மற்றபடி, யாரையும் ஏறி மிதித்து, அண்ணன் இந்த நிலைமைக்கு வரவில்லை. கட்சியில் படிப்படியாக முன்னேறித்தான், அண்ணன் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார்" என்றார்கள்.

Read Entire Article