கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பணிக்கு வரவேண்டாம்: ஜிம்பாப்வே

4 months ago 13

செய்திப்பிரிவு

Published : 15 Sep 2021 17:24 pm

Updated : 15 Sep 2021 17:24 pm

Published : 15 Sep 2021 05:24 PM
Last Updated : 15 Sep 2021 05:24 PM

zimbabwe-has-barred-unvaccinated-civil-servants

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள் பணிக்கு வரவேண்டாம் என்று ஜிம்பாப்வே அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மோனிகா கூறும்போது, “கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு ஊழியர்களுக்குப் போதிய நேரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. எனவே அரசு ஊழியர்கள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுதான் இனி பணிக்கு வரவேண்டும். மக்கள் தொகையில் 12% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஜிம்பாப்வேவில் கடந்த 24 மணி நேரத்தில், 145 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிம்பாப்வேவில் இந்த மாதம்தான் கரோனா தொற்று குறைந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு உணவு விடுதிகள், தேவாலயங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 20 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தவறவிடாதீர்!

 தோனி தேவை; 2013-ம் ஆண்டிலிருந்து ஐசிசி கோப்பை ஏதும் இந்தியா வெல்லவில்லையே?- பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து  நேரடி வகுப்புக்கு வருமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை  கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை 75.89 கோடியைக் கடந்தது  இந்தியர்களின் சட்டவிரோதக் குடியேற்றத்தைப் பற்றிப் பேசும் ஷாரூக்- ராஜ்குமார் ஹிரானி திரைப்படம்

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article