கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் மலிங்கா

1 week ago 1

செய்திப்பிரிவு

Published : 14 Sep 2021 19:28 pm

Updated : 14 Sep 2021 19:30 pm

Published : 14 Sep 2021 07:28 PM
Last Updated : 14 Sep 2021 07:30 PM

lasith-malinga-retires-from-t20s-to-close-out-playing-career

20 - 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியைச் சேர்ந்த மலிங்கா இந்த ஆண்டு தொடகத்தில் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது 20 -20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பை மலிங்கா தனது யூ டியூப் சேனலில் அதிகாரபூர்வாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ இன்று நான் 20 -20 போட்டிகளுக்கு நிரந்தரமாக ஓய்வை அளிக்க முடிவு செய்திருக்கிறேன். 20- 20 கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. எனது அணிக்கும் (இலங்கை அணி, மும்பை இந்தியன்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ்) , அணியில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்”

மலிங்கா சர்வதேச அளவில் 20 -20 போட்டிகளில் 107 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் மலிங்கா விடைபெற்று இருக்கிறார்.

தவறவிடாதீர்!

 உதகையில் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கும் நேரத்தில் குற்றவாளி தப்பி ஓட்டம்  தமிழகத்தில் இன்று 1,591 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 212 பேருக்கு பாதிப்பு: 1,537 பேர் குணமடைந்தனர்  காவல் துறையைச் சேர்ந்த 100 பேருக்கு 'அண்ணா பதக்கம்': தமிழக அரசு அறிவிப்பு  ஏமனில் பதற்றம்: சவுதி தாக்குதல்
Read Entire Article