சிட்னியில் குறைந்த கரோனா: கட்டுப்பாடுகளில் தளர்வு

4 months ago 8

செய்திப்பிரிவு

Published : 15 Sep 2021 16:50 pm

Updated : 15 Sep 2021 16:51 pm

Published : 15 Sep 2021 04:50 PM
Last Updated : 15 Sep 2021 04:51 PM

sydney-corona-update

சிட்னியில் கரோனா கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் கரோனா குறையத் தொடங்கியுள்ளது. மேலும், கரோனா பரவல் மையங்களாக இருந்த சிட்னி போன்ற நகரங்களிலும் கரோனா குறைந்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தும் விகிதமும் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முடிவுகளுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர். அதன்படி இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெறப்பட உள்ளது. எனினும் கரோனா தடுப்பூசி செலுத்தும் விகிதம் 70% தொடும் வரையில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி போன்ற நகரங்களில், பள்ளிகள், அலுவலகங்கள் ஆகியவை ஜூன் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 20 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தவறவிடாதீர்!

 எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை: அன்புமணி  1 - 8ஆம் வகுப்புகள் திறப்பு; செப். இறுதியில் முடிவு- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்  புதுச்சேரியில் 124 பேருக்கு கரோனா: 2 பேர் உயிரிழப்பு  கிறிஸ்டோஃபர் நோலனின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் யூனிவர்ஸல்

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article