சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 3 பேர் பலி

1 month ago 9

செய்திப்பிரிவு

Published : 16 Sep 2021 12:08 pm

Updated : 16 Sep 2021 12:08 pm

Published : 16 Sep 2021 12:08 PM
Last Updated : 16 Sep 2021 12:08 PM

three-killed-dozens-injured-as-earthquake-hits-china-s-sichuan

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 10 கிலோ மீட்டர் ஆழம் இருக்கும்.
இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை மூன்று பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாகப் பல வீடுகள் சரிந்துள்ளதாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் மலைப் பகுதிகளான மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள் தொடர்ந்து நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

2008ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் 7.9 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 87,000 பேர் பலியாகினர் என்பது நினைவுகூரத்தக்கது.

M 6.0 earthquake hits China's #Sichuan Province, killing 2 and injuring over 50 people. Local rescue efforts are underway.#地震 #中國 #四川 #China #earthquake #RESCUE #brakingnews pic.twitter.com/LqM8xLFx7E

— Chaudhary Parvez (@ChaudharyParvez) September 16, 2021

தவறவிடாதீர்!

 தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?  உள்ளாட்சித் தேர்தல்; மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி: கமல் அறிவிப்பு  'அனபெல் சேதுபதி' பேய்ப் படம் அல்ல: இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன்  ஐபிஎல்2021: டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் விலகல்: குல்வந்த் கேஜ்ரோலியா சேர்ப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article