சூர்யா - ரம்யா பாண்டியன் இணையும் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

1 week ago 1

சூர்யா தயாரித்துள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தயாரிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’. பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தை அரிசில் மூர்த்தி இயக்கி உள்ளார். பாடகர் கிரிஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தின் போஸ்டர்

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தின் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 24-ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நடிகர் சூர்யா தயாரிப்பில் ஓடிடி-யில் வெளியாகும் 3-வது படம் இதுவாகும், இதற்கு முன்னர் சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்கள் ஓடிடி-யில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article