தக்காளி விலை மீண்டும் சரிவு!

4 months ago 13

| Samayam Tamil | Updated: Sep 15, 2021, 3:03 PM

சென்னையில் இன்று தக்காளி விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.

சென்ற ஆகஸ்ட் மாதம் முழுவதும் காய்கறி விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். எனினும் செப்டம்பர் மாதம் தொடங்கியது முதலே ஓரளவுக்குக் காய்கறி விலை குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களிலும் விலைச் சரிவு இருந்தது. நேற்று தக்காளி விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலைப் பட்டியல் என்ன என்று பார்க்கலாம்.சென்னையில் இன்று (செப்டம்பர் 15) ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாயாகக் குறைந்துள்ளது. நேற்று 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெங்காயம் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் 10 ரூபாயிலேயே இருக்கிறது. அவரைக்காய் விலை 10 ரூபாயாகவும், பீன்ஸ் விலை 20 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிலோ கேரட் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி விலைப் பட்டியல்!

தக்காளி - ரூ.10
வெங்காயம் - ரூ.10
அவரைக்காய் - ரூ.10
பீன்ஸ் - 20
பீட்ரூட் - ரூ.15
வெண்டைக்காய் - ரூ.10
நூக்கல் - ரூ.15
உருளைக் கிழங்கு - ரூ.14
முள்ளங்கி - ரூ.10
புடலங்காய் - ரூ.5
சுரைக்காய் - ரூ.5
பாகற்காய் - ரூ.10
கத்தரிக்காய் - ரூ.10
குடை மிளகாய் - ரூ.25
கேரட் - ரூ.35
காளிபிளவர் - ரூ.20
சவுசவு - ரூ.10
தேங்காய் - ரூ.22
வெள்ளரிக்காய் - ரூ.12
முருங்கைக்காய் - ரூ.10
இஞ்சி - ரூ.40
பச்சை மிளகாய் - ரூ.15
கோவைக்காய் - ரூ.12

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்

இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்

Web Title : koyambedu market vegetable price list today 15th sep 2021
Tamil News from Samayam Tamil, TIL Network

Read Entire Article