தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

4 months ago 10

செய்திப்பிரிவு

Published : 15 Sep 2021 16:20 pm

Updated : 15 Sep 2021 16:20 pm

Published : 15 Sep 2021 04:20 PM
Last Updated : 15 Sep 2021 04:20 PM

gold-price

சென்னை

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 144 உயர்ந்துள்ளது.

கரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன.

பங்குச்சந்தைகள் சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ. 4452- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ. 35616-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 38528-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 20 பைசா உயர்ந்து ரூ 67.70-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 67.700ஆக உள்ளது.

தவறவிடாதீர்!

 நாடு முழுவதும் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 2 வாரம் கெடு  மோசமான வானிலையால் நடுக்கடலில் சிக்கிய படகு: 7 மீனவர்களை மீட்டது கடலோர காவல்படை  2024 மக்களவைத் தேர்தல்; பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மிகப்பெரிய போராட்டம்: காங்கிரஸ் தீவிர ஆலோசனை  நாட்டின் பல இடங்களில் தாக்குதல் திட்டம் முறியடிப்பு: பாக். தீவிரவாதிகள் உள்பட 6 பேர் கைது
Read Entire Article