நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம்?

4 months ago 4

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர உமா என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

காஜல் அகர்வால்

இந்நிலையில், 36 வயதாகும் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வலம் வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் காஜல் அகர்வால் தற்போது சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் காஜல் அகர்வால் தரப்பில் இதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

Read Entire Article