நீட் தேர்வு எழுதிய கூலித் தொழிலாளி மகள் தற்கொலை! - தொடரும் சோகம்; வேலூரில் அதிர்ச்சி

4 months ago 3

தமிழகத்தில் `நீட்’ தேர்வு காரணமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சோகம் தொடர்ந்துகொண்டிருப்பது, அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள கூழையூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டார். அரியலூர் மாவட்டம், சாத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதன் தொடர்ச்சியாக, வேலூரில் மேலும் ஒரு மாணவி, நீட் தேர்வு எழுதிவிட்டு, தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரின் மனைவி ருக்மணி. இருவருமே தினக்கூலி அடிப்படையில் கூலி வேலை செய்துவருகிறார்கள். இவர்களின் 17 வயது மகள் சௌந்தர்யா, ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 600-க்கு 510 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியம்கொண்ட சௌந்தர்யா `நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

சௌந்தர்யா

சௌந்தர்யா

Read Entire Article