பா.ம.க. தனித்து போட்டியிடுவதில் எந்தவொரு வருத்தமுமில்லை - செல்லூர் ராஜூ

4 months ago 3

நீட் தேர்வு ரத்து செய்யாததற்கு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை:

அண்ணாவின் பிறந்தநாளை யொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அண்ணாவின் கொள்கைகள், சித்தாந்தத்தை தாங்கி பிடித்து அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே செயல்படுகிறது, அண்ணாவின் எண்ணத்தை எடப்பாடியார் செயல்படுத்தி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

தி.மு.க.வின் திட்டங்கள், செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், உதயநிதி, கனிமொழி, முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யாததற்கு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க. ஆட்சியில் சட்ட மசோதா கொண்டு வந்தோம், தி.மு.க. கொண்டு வந்த நீட் தேர்வு சட்ட மசோதாவில் ராஜன் கமிட்டி பரிந்துரை மட்டும் இணைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. கொண்டு வந்துள்ள நீட் தேர்வு சட்ட மசோதாவை தி.மு.க. எப்படி செயல்படுத்த போகிறது என்பதை நாம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்,

கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி, துண்டை தேவையென்றால் தோளில் போட்டு கொள்ளலாம், தேவையில்லை என்றால் கழட்டி வைத்து கொள்ளலாம், அ.தி.மு.க. எந்தவொரு கால கட்டத்திலும் கூட்டணியை நம்பி இருந்ததில்லை. மக்கள், ஆட்சியில் செய்த திட்டங்கள், தொண்டர்களை நம்பியே அ.தி.மு.க. உள்ளது. கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தான் எடுபடும். உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்து அமையும்.எனவே பா.ம.க. தனித்து போட்டியிடுவதால் வருத்தம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article