புதுச்சேரியில் 124 பேருக்கு கரோனா: 2 பேர் உயிரிழப்பு

4 months ago 3

அ.முன்னடியான்

Published : 15 Sep 2021 16:08 pm

Updated : 15 Sep 2021 16:08 pm

Published : 15 Sep 2021 04:08 PM
Last Updated : 15 Sep 2021 04:08 PM

puducherry-corona-update

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (செப்.15) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,345 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-87, காரைக்கால்- 29, ஏனாம்- 4, மாஹே- 4 பேர் என மொத்தம் 124 பேருக்கு (2.32 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 170 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 730 பேரும் என 900 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுச்சேரி அண்ணா சாலையைச் சேர்ந்த 61 வயது முதியவர், புதுச்சேரி கிருஷ்ணன் நகர் 68 வயது முதியவர் என 2 பேர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,825 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. புதிதாக 80 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 338 (97.82 சதவீதம்) ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 77 ஆயிரத்து 120 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

 மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; செப்டம்பர் 19ம் தேதி வரை  புதுவை மாநிலங்களவைத் தேர்தல்: நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமையில்லை  நாடு முழுவதும் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 2 வாரம் கெடு  தற்கொலை முடிவை எடுப்பது வேதனை தருகிறது; மாணவர்கள் மனம் தளர வேண்டாம்: வைகோ வேண்டுகோள்

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article