புதுச்சேரி: `எம்.பி-களுக்காக வீணடிக்கப்பட்ட வரிப்பணம்!’ -மத்திய உள்துறை, ஆளுநருக்கு பறந்த புகார்

4 months ago 3

புதுச்சேரி ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, மத்திய உள்துறை மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கும் புகார் கடிதத்தில், “புதுச்சேரியில் மறைந்த ப.சண்முகம், எம்.ஓ.ஹெச்.பாரூக் போன்றவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாடாளுமன்ற மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்தவர்கள்.

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

ஆனால் அவர்கள் புதுச்சேரி அரசின் நிதியை லட்சக்கணக்கில் செலவு செய்து தங்களுக்கென தனியாக அலுவலகம் அமைத்துக் கொள்ளவில்லை. ஏற்கெனவே இருந்த அரசுக் கட்டடங்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஆனால் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மத்திய இணை அமைச்சராக இருந்த காலகட்டம் முழுவதும் (08.11.2009 – 31.03.2014) நகராட்சிக்கு சொந்தமான கம்பன் கலையரங்கத்தின் மாடியை ரூ.58.84/- லட்சம் செலவு செய்து தனது அலுவலகமாக பயன்படுத்திக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் அந்த அலுவலக செயல்பாட்டுக்காக 2,66,037/- லட்சம் ரூபாயை புதுச்சேரி நகராட்சி கட்டியிருக்கிறது.

புதுச்சேரி முன்னாள் ராஜ்யசபா எம்.பி ப.கண்ணன்

புதுச்சேரி முன்னாள் ராஜ்யசபா எம்.பி ப.கண்ணன்

அதேபோல 19.10.2009 முதல் 31.05.2013 வரை ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்த ப.கண்ணன், 1,000 சதுர அடியைக் கொண்ட பிப்டிக் மாடியை ரூ.7,49,700/- லட்சம் செலவு செய்து அலுவலகமாக பயன்படுத்திக் கொண்டார். இவர்களுக்குப் பிறகு நாடாளுமன்ற மற்றும் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட யாரும் அரசின் செலவில் தனியாக அலுவலகம் அமைத்துக் கொள்ளவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பு முதல் ரங்கசாமி பதவியேற்பு வரை! - பா.ஜ.க-வின் ரோல் என்ன?

புதுச்சேரியின் எம்.பியாக தேர்வு செய்யப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கென்று தனியாக ஒரு கட்டடம் கட்டியிருந்தாலும் கூடம் இத்தனை லட்சங்கள் செலவாகியிருக்காது. அதனால் இனிவரும் காலங்களில் புதுச்சேரியின் நாடாளுமன்ற மற்றும் மக்களவை எம்.பிக்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மக்களின் வரிப்பணத்தை வீணடித்து தனியாக அலுவலகங்களை அமைப்பதை தடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Read Entire Article