பேஸ்புக் உதவியுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த மகள்: அமெரிக்காவில் நெகிழ்ச்சி சம்பவம்

1 month ago 8
mother-reunites-with-daughter-after-14-years

டெக்சாஸ்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஏஞ்சலினா வென்செஸ். இவருக் கும், இவரது கணவர் பாப்லோ ஹெர்னான்டஸுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் தமது மகள் ஜாக்குலினை ஹெர்னான்டஸ் கடத்திச் சென்றார். அப்போது அவருக்கு வயது 5.

புகாரின் அடிப்படையில் போலீஸார் பல இடங்களில் தேடியும் ஜாக்குலினை கண்டு பிடிக்க முடியவில்லை. காலங்கள் உருண்டோடின. பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் 19 வயது இளம்பெண்ணாக மாறினார் ஜாக்குலின். தனது தந்தையுடன் டெக்சாஸில் அவர்வசித்து வந்தார்.

தனது தாயாரை பார்க்க வேண்டும் என ஜாக்குலின் பல முறை வலியுறுத்தியும் அவரது தந்தை அதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் பேஸ்புக்கில் தனது தாயாரின் பெயரான ஏஞ்சலினா வென்செஸ் என்பதை பதிவிட்டு ஜாக்குலின் தேடிய போது, பலரின் முகங்கள் வந்திருக்கின்றன. அவர்களில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு ஜாக்குலின் பேசியிருக்கிறார்.

அப்போது, தான் 5 வயதில் தனது தந்தையால் பலவந்தமாக எடுத்து வரப்பட்டதை அவர் கூறியிருக்கிறார். அதை எதிர் முனையில் இருந்த ஏஞ்சலினாவும் உறுதி செய்துவிட்டார்.

அதன் பின்னர், நேற்று முன்தினம் டெக்சாஸுக்கு வந்த தனது தாயாரை கட்டியணைத்து வரவேற்றார் ஜாக்குலின். இதுதொடர்பான செய்திகள் அமெரிக்க ஊடகங்களிலும் வெளி யாகின. 14 ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்புக் உதவியுடன் தாயுடன் மகள் இணைந்த சம்பவம் அமெரிக்காவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article