மியூச்சுவல் ஃபண்ட் வைத்து கடன் வாங்கலாம்.. சூப்பர் திட்டம்!

4 months ago 4

ஹைலைட்ஸ்:

மியூச்சுவல் ஃபண்ட் வைத்து கடன் வாங்கும் திட்டம்டாடா கேபிடல் அறிமுகப்படுத்திய புதிய பிளான்
டாடா குழுமத்தின் கீழ் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக டாடா கேபிடல் (Tata Capital) செயல்பட்டு வருகிறது. கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் பல்வேறு புதிய சேவைகள் மற்றும் திட்டங்களை டாடா கேபிடல் அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த வரிசையில், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் வைத்து கடன் பெறும் (Loan against mutual funds) திட்டத்தை டாடா கேபிடல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க டிஜிட்டல் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் மூலம் டாடா கேபிடல் வாடிக்கையாளர்கள் மிக விரைவாக 5 லட்சம் ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை உடனடி கடன் பெற்றுக்கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்ட்ஸில் பல்வேறு வகையான எக்விட்டிஸ் மற்றும் டெப்ட் திட்டங்களை வைத்து டாடா கேபிடலிடம் கடன் பெற்றுக்கொள்ளலாம்.

ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. ஹேப்பி நியூஸ்!
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வைத்து கடன் பெறுவோர் தத்தம் தேவைக்கு ஏற்ப சேவையை பெற்றுக்கொள்ள டாடா கேபிடல் வழிவகை செய்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் வைத்து கடன் பெறும் திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் மிக எளிதாக நிதி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என டாடா கேபிடலின் தலைமை டிஜிட்டல் அதிகாரி அபாண்டி பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் முக்கிய பயன்கள்:

* முழுக்க முழுக்க ஆன்லைன் வசதி

* ஓவர்டிராஃப்ட் அல்லது டெர்ம் கடனாக விண்ணப்பிக்கலாம்

* சில நிமிடங்களிலேயே இணைந்துவிடலாம்

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்

Web Title : tata capital launches loan against mutual funds scheme
Tamil News from Samayam Tamil, TIL Network

Read Entire Article