மிரட்டிய சென்செக்ஸ்.. பங்குச் சந்தையில் புதிய சாதனை!

4 months ago 4

ஹைலைட்ஸ்:

சென்செக்ஸ் 58600 புள்ளிகளுக்கு மேல் உயர்வுபங்குச் சந்தையில் புதிய சாதனை
இன்று இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 58600 புள்ளிகளை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 17450 புள்ளிகளை தாண்டியுள்ளது.

இன்று வர்த்தகத்தில் பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி, ஓஎன்ஜிசி பங்குகள் தலா 5 விழுக்காடுக்கு மேல் உயர்ந்துள்ளன. இதுபோக பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, டைடன் ஆகிய பங்குகள் தலா 3 விழுக்காடுக்கு மேல் உயர்ந்துள்ளன.

நிப்டி ஐடியில் டிசிஎஸ், எச்டிஎல் டெக், இன்ஃபோசிஸ் போன்ற ஹெவிவெய்ட் பங்குகள் சுமார் 2 விழுக்காடு உயர்ந்துள்ளன. நிப்டியில் உள்ள முதல் 50 பங்குகளில் 31 பங்குகளின் மதிப்பு இன்று உயர்ந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் 19 பங்குகள் பாசிட்டிவாக இருக்கின்றன.

கிடுகிடுவென உயர்ந்த Force Motors ஷேர்.. காரணம் இதுதான்!
எச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகிய பங்குகள் சரிந்துள்ளன. அதிகபட்சமாக டாடா கன்சியூமர்ஸ் சுமார் 1 விழுக்காடு சரிந்துள்ளது. அடுத்தபடியாக பிபிசிஎல், கிரசிம், எய்ச்சர் மோட்டார்ஸ் ஆகிய பங்குகளும் சரிந்துள்ளன.

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்

Web Title : share market news in tamil sensex new record at 58600 points sep 15th 2021
Tamil News from Samayam Tamil, TIL Network

Read Entire Article