ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும் ஆசனம், முத்திரை

4 months ago 3

கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகச் சிகிச்சையை முறையாக தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிடும் முன் பயிற்சி செய்யுங்கள். நிச்சயமாக ரத்த அழுத்தத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இன்றைய பரபரப்பான உலகில் மனிதன் காலை முதல் இரவு வரை பணத்திற்காகவும். தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்கும் உழைத்துக் கொண்டே இருக்கிறான். உட்கார நேரமில்லை என்று கூறுகிறான். பணமும் அளவுக்கு அதிகமாக சம்பாதித்து விடுகிறான். உடலில் ரத்த அழுத்தத்தையும் அதிகமாக சம்பாதித்து தினமும், மாத்திரை சாப்பிட்டு ஒரு பய உணர்வுடன் வாழ்கிறான். பதட்டத்துடன் வாழ்கிறான். கடைசி வரை மாத்திரை சாப்பிட வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறான்.

இந்நிலையிலிருந்து மாறி ஒவ்வொரு மனிதனும் உடலில் ரத்த அழுத்தம் என்ற நோய் வராமல் வாழ முடியும். நமது பழக்கத்தில் வந்தாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகச் சிகிச்சையை முறையாக தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிடும் முன் பயிற்சி செய்யுங்கள். நிச்சயமாக ரத்த அழுத்தத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இது அனைவரும் செய்ய வேண்டிய பயிற்சியாகும்.

முதல் பயிற்சி - வஜ்ராசனத்தில் சின் முத்திரை

தரையில் ஒரு விரிப்பு விரித்து கிழக்கு முகமாக இரு கால்களையும் நீட்டவும். பின் ஒவ்வொரு காலாக மூட்டு வரை மடித்து இரு கால் மூட்டுகளை படத்தில் உள்ளது போல் சேர்க்கவும். இரு கை விரல்களிலும் சின் முத்திரை செய்யவும். கட்டை விரல் நுனியும், ஆள்காட்டி விரல் நுனியும் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் கீழ்நோக்கி படத்தில் உள்ளது போல் இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும்.

மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மிக மெதுவாக இரு நாசியிலும் மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். பின் சாதாரண மூச்சில் இயல்பாக நடக்கும் மூச்சில் ஒரு மனமும், கைவிரல் நுனியில் கொடுத்த அழுத்தத்தில் ஒரு மனமும் லயிக்கட்டும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

வஜ்ராசனத்தில் முகுள முத்திரை

பின் வஜ்ராசனத்தில் முகுள முத்திரை பயிற்சி செய்ய வேண்டும். பெருவிரல் நோக்கி நான்கு விரல்களையும் குவித்து மேல் நோக்கி வைக்கவும் மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் இவ்வாறு செய்து விட்டு சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

சஸங்காசனம்

பின் வஜ்ராசனத்திலிருந்து மூச்சை வெளிவிட்டு குனிந்து நெற்றி தரையில் படவேண்டும். இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்து சாதாரண மூச்சில் பத்து முதல் இருபது வினாடிகள் இருக்கவும்.

யோகக் கலைமாமணி
பி.கிருஷ்ணன் பாலாஜி M.A. (YOGA)
6369940440

Read Entire Article