ரெட் லைட் போட்டதும்.. இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவிற்காக சாலையில் ஆடிய பெண்- கடைசியில் இப்படியா நடக்கணும்!

1 week ago 6

For Quick Alerts

Subscribe Now  

For Quick Alerts

ALLOW NOTIFICATIONS  

bredcrumb

Updated: Wednesday, September 15, 2021, 16:58 [IST]

Google Oneindia Tamil News

இந்தூர்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ ஒன்றுக்காக சாலையில் நின்று பெண் ஒருவர் ஆடியது வைரலாகி உள்ளது. பலர் இப்படி சாலையில் நின்று ஆடுவது டிரெண்ட் ஆகி வரும் நிலையில் அந்த பெண் தற்போது தேவையில்லாத பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்.

இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதில் இருந்து அதை போலவே பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டது. இதையடுத்துதான் இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் என்ற புதிய வசதி கொண்டு வரப்பட்டது. முழுக்க முழுக்க ஷார்ட் வீடியோக்கள் பதிவேற்றும் வசதி கொண்டதாக இது உருவாக்கப்பட்டது.

சமையலுக்கு 3 குழுக்கள்.. 2 நாட்களாக அணையாத அடுப்பு.. உறவினர்களால் உள்ளம் குளிர்ந்த டிடிவி தினகரன்..!சமையலுக்கு 3 குழுக்கள்.. 2 நாட்களாக அணையாத அடுப்பு.. உறவினர்களால் உள்ளம் குளிர்ந்த டிடிவி தினகரன்..!

தற்போது இணைய உலகில் ரீல்ஸ் புதிய டிரெண்ட் அடித்துள்ளது. பலர் இந்த ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். பரம சுந்தரி பாடல் தொடங்கி நீயே ஒளி பாடல் வரை நிறைய ஆடியோக்களுக்கு நடனம் ஆடும் டிரெண்ட் ரீல்ஸில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ்

ரீல்ஸ்

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் ரீல்ஸ் வீடியோவிற்கு நடனம் ஆடி சிக்கலில் மாட்டி உள்ளார். அங்கு இந்தூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷ்ரேயா கால்ரா என்ற பெண் ரீல்ஸ் உலகில் மிகவும் பிரபலமானவர். வியூஸ் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இந்தூர் சாலையில் நடனம் ஆடி உள்ளார். கார்கள் செல்லும் பிஸியான சாலையில் நடனம் ஆடி உள்ளார்.

At Rasoma square in Indore a girl ran across the road to dance on the zebra crossing as soon as the traffic signal turned red, her video became viral on social media platform, later police served a notice to the girl for violating the traffic rules. pic.twitter.com/9ZIeWHhSwO

— Anurag Dwary (@Anurag_Dwary) September 15, 2021

ஆட்டம்

கருப்பு நிற உடையில், சாலையில் ரெட் சிக்னல் போட்டதும், சாலை கடக்கும் நடு பகுதியில் நின்று இந்த பெண் நீண்ட நேரம் ஆடி இருக்கிறார். கேமரா மேன் இவரை சுற்றி சுற்றி வீடியோ எடுத்துள்ளார். அங்கு சிக்னலில் நின்ற கார், பைக்குகளில் இருந்தவர்கள் எல்லாம் இந்த பெண் ஆடுவதை பார்த்துவிட்டு, சிக்னலை பார்க்காமல் திகைத்து நின்று இருக்கிறார்கள். இந்த வீடியோவை ரீல்சில் பதிவேற்றி வியூஸ்களை அவர் அள்ளி உள்ளார்.

விளக்கம்

விளக்கம்

இந்த சம்பவம் இந்தூர் ரசோமா சதுக்கம் அருகே நடந்துள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் ஷ்ரேயாவை கண்டுபிடித்த இந்தூர் போலீசார் அவருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளனார். சாலை விதிகளை மீறியதற்காகவும், மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதற்காகவும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இப்படி வீடியோ வெளியிட்டதற்கு விளக்கம் அளிக்கும்படி குறிப்பிட்டுள்ளனர்.அவர் கொடுக்கும் விளக்கத்தை பொறுத்து இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கேப்ஷன்

கேப்ஷன்

சாலையில் இப்படி இவர் ஆடி அது போலீஸ் வரை சென்ற நிலையில் தனது வீடியோவில் இவர் கேப்ஷனை மாற்றி உள்ளார். எல்லோரும் சாலை விதிகளை மதியுங்கள், மாஸ்க் போடுங்கள் என்று அந்த பெண் தனது கேப்ஷனை மாற்றி உள்ளார். ரீல்ஸ் போன்ற வீடியோ தளங்களில் வைரலாக வேண்டும் என்று பலர் சாலை விதிகளை மீறுவது, பைக்கில் ஸ்டண்ட் செய்வது அதிகரித்து வரும் நிலையில் இந்தூர் போலீசார் இப்படி வீடியோ எடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

English summary

Women posts video in Instagram reels from busy Indore roads goes viral, later she changed her caption as a road awarness.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்

Enable

x

Read Entire Article