வெளியேறும் ஃபோர்டு.. தமிழக அரசிடம் உதவி கேட்கும் ஊழியர்கள்!

4 months ago 4

| Samayam Tamil | Updated: Sep 15, 2021, 3:58 PM

ஃபோர்டு ஆலை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசிடம் உதவி கேட்கும் ஊழியர்கள்.

ஹைலைட்ஸ்:

இந்தியாவில் இருந்து வெளியேறும் ஃபோர்டு நிறுவனம்வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசிடம் உதவி கேட்கும் ஊழியர்கள்
ஃபோர்டு (Ford) நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அண்மையில் தெரிவித்தது. சென்னைக்கு அருகே ஃபோர்டு நிறுவனத்தின் மிகப்பெரிய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை மூடப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பார்கள்.

இந்நிலையில், சென்னைக்கு அருகே உள்ள ஃபோர்டு ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டால் தங்களது வேலைவாய்ப்புகளை பாதுகாக்க வேண்டுமென தமிழக அரசிடம் ஃபோர்டு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் சங்க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்திக்கொள்ளப்போவதாக ஃபோர்டு நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்தது. இந்த செய்தி, ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. ஹேப்பி நியூஸ்!
குஜராத் மாநிலத்தில் உள்ள ஃபோர்டு ஆலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னைக்கு அருகே உள்ள ஃபோர்டு ஆலையில் 2022ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 4000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் சுமார் 2,600க்கு மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் மற்றும் 1000க்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்பால் 4000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதார கேள்விக்குறியாகியுள்ளதால், தங்களுக்கு உதவும்படி தமிழ்நாடு அரசிடம் சென்னை ஃபோர்டு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்

இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்

Web Title : chennai ford employees seek tamilnadu government help to save their livelihood
Tamil News from Samayam Tamil, TIL Network

Read Entire Article