வேட்பு மனுவில் வழக்குகளை மறைத்தாரா மம்தா பானர்ஜி?

4 months ago 2

கோல்கட்டா:மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில், தன் மீதான ஐந்து வழக்குகளை மறைத்துள்ளார் என, பா.ஜ., கூறிய குற்றச்சாட்டை திரிணமுல் காங்., மறுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திற்கு கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., அமோக வெற்றி பெற்றது. எனினும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மம்தா, ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.இதையடுத்து, பவானிபூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 30ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிட மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்துஉள்ளார்.அதில், மம்தா மீது அசாம் போலீசார் பதிவு செய்துள்ள ஐந்து வழக்குகள் குறித்து, அவர் குறிப்பிடவில்லை என, பா.ஜ., வேட்பாளர் ப்ரியங்கா திப்ரேவல் தரப்பில், தேர்தல் கமிஷனில் புகார் தெரிவிக்கப்பட்டது

.'தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிராக, அசாமில் மம்தா 2018ல் போராட்டம் நடத்தினார். அப்போது வன்முறையை துாண்டும் விதமாக அவர் பேசியதற்காக, போலீசார் ஐந்து வழக்குகள் பதிவு செய்தனர். இந்த விபரங்களை தன் வேட்புமனுவில் மம்தா மறைத்து விட்டார். 'இது தொடர்பாக மூன்று பத்திரிகைகள் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன' என, பா.ஜ., தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து திரிணமுல் காங்., தரப்பில் பதில் அளிக்கும் போது, 'குற்றப்பத்திரிகையில் பெயர் இருந்தால் மட்டுமே, அதை வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும்' என தெரிவிக்கப் பட்டது.

Advertisement

Read Entire Article