பிக்பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழையும் பிரபல இயக்குநர்?.. கன்டென்டுக்கு பஞ்சமே இருக்காதே!

1 month ago 19

For Quick Alerts

Subscribe Now  

For Quick Alerts

ALLOW NOTIFICATIONS  

Updated: Wednesday, October 20, 2021, 15:30 [IST]

Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியில் இயக்குநர் ரவீந்தர் சந்திரசேகர் வருவார் என சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நமிதா மாரிமுத்து திடீரென போட்டியில் இருந்து அவராகவே விலகி விட்டதாக பிக்பாஸ் அறிவித்தார்.

எஸ்.பி.வேலுமணி Vs செந்தில்பாலாஜி... யார் கை ஓங்கும்..? களைகட்டப் போகும் கோவை அரசியல்..! எஸ்.பி.வேலுமணி Vs செந்தில்பாலாஜி... யார் கை ஓங்கும்..? களைகட்டப் போகும் கோவை அரசியல்..!

இதையடுத்து மற்ற 17 போட்டியாளர்களில் நாடியா சாங் கடந்த ஞாயிற்றுக்கிழமை எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது வைல்ட் என்ட்ரி நடைபெறும் என தெரிகிறது.

டிஆர்பி ரேட்

டிஆர்பி ரேட்

ஒவ்வொரு முறையும் எலிமினேட் ஆகும் போது டிஆர்பி ரேட்டிங்கிற்காக ஒருவர் அல்லது இருவரை இடைவெளி விட்டு வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்து அழைப்பர். அந்த வகையில் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் யார் வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுப்பார் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

நமிதா மாரிமுத்து

நமிதா மாரிமுத்து

அந்த நிலையில் ஏற்கெனவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நமிதா மாரிமுத்து வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இயக்குநர் ரவீந்தர் சந்திரசேகரன் வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுப்பார் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

ஆனால் ரவீந்தரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க விஜய் டிவி கன்வின்ஸ் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர் வந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கன்டென்டுக்கு பஞ்சமே இல்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இவர் பிக்பாஸ் வீட்டில் ஏற்கெனவே நல்லா பேசி கொண்டிருக்கும் யூடியூபர் அபிஷேக்கிற்கு போட்டியாக இவர் இருப்பார் என தெரிகிறது.

பீட்டர் பால்

பீட்டர் பால்

வனிதா விஜயகுமார்- பீட்டர் பால் திருமணத்தை விமர்சித்ததன் மூலம் இயக்குநர் ரவீந்தர் பிரபலமடைந்தார். இதனால் வனிதா அவரை பாடி ஷேம்மிங் செய்தது என தொடர்ந்து பரபரப்பு எழுந்தது. அது போல் பீட்டர் பால் திருமண விவகாரத்தில் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை தரக்குறைவாக பேசியதையும் ரவீந்தர் கண்டித்துள்ளார். தயாரிப்பாளரான இவர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநராகவும் அறிமுகமாகினார். இவர் ஒரு யூடியூப் பிரபலமும் ஆவார். ஃFATMAN என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஒரு பாடலையும் எழுதினார். எனவே தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், யூடியூபர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் இயக்குநர் ரவீந்தர்.

English summary

Vijay TV is convincing Director Ravindran Chandrasekaran to participate in Biggboss house through wild card entry.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்

Enable

x

Read Entire Article