இதுதான் ஒரே குறி.. ரோஹித் கொடுத்த எதிர்பார்க்காத \"ஹிண்ட்\".. பக்கா திட்டத்தோடு களமிறங்கிய டிராவிட்!

2 months ago 5

For Quick Alerts

Subscribe Now  

For Quick Alerts

ALLOW NOTIFICATIONS  

bredcrumb

Published: Wednesday, November 17, 2021, 19:44 [IST]

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டி பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

 சிஎஸ்கே வீரர் போட்ட ட்வீட்.. 3 வருடங்களுக்கு பிறகு அடித்த லக்.. என்ன விஷயம் தெரியுமா? IND vs NZ: சிஎஸ்கே வீரர் போட்ட ட்வீட்.. 3 வருடங்களுக்கு பிறகு அடித்த லக்.. என்ன விஷயம் தெரியுமா?

நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் ஜெய்ப்பூரில் தொடங்கி உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பவுலிங் செய்து வருகிறது. ரோஹித் சர்மா கேப்டன்சிக்கு கீழ் இந்திய அணியில் கே எல் ராகுல், சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், அக்சர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாகர், சிராஜ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர்

இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கி உள்ளார். ஐபிஎல் தொடரில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இவர் கொல்கத்தா அணியில் சிறப்பாக ஆடினார். அதன்பின் சையது முஷ்டாக் அலி தொடரிலும் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக ஆடினார். இவர் பவுலிங்கிலும் அதிக அளவில் நம்பிக்கை அளித்தார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்த நிலையில்தான் இந்திய அணிக்குள் அவருக்கு நியூசிலாந்து டி 20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கேப்டன்சி, ராகுல் டிராவிட் கோச்சிங்கிற்கு கீழ் புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் இந்திய அணியை அடுத்த உலகக் கோப்பை டி 20 தொடருக்கு தயார் செய்வதாக ரோஹித் சர்மா ஹிண்ட் கொடுத்துள்ளார். 2022ல் அடுத்த டி 20 உலகக் கோப்பை நடக்க உள்ளது.

ஹிண்ட்

ஹிண்ட்

இதற்கு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதைதான் பற்றி இன்று அவர் ஹிண்ட் கொடுத்தார். ரோஹித் சர்மா தனது பேச்சில், நாங்கள் முதலில் பவுலிங் செய்வோம். பிட்ச் நன்றாக உள்ளது. அதிக ஸ்கோர் எடுத்தால் ஆட்டம் விறுவிறுப்பாக செல்லும். நாங்கள் பயிற்சி செய்த போதே இங்கு ட்யூ இருந்தது. அது எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர்

அணியில் வெங்கடேஷ் ஐயர் சேர்க்கப்பட்டள்ளார். நாங்கள் மூன்று பாஸ்ட் பவுலர்கள், இரண்டு ஸ்பின் பவுலர்களை வைத்து ஆடுகிறோம். அடுத்த உலகக் கோப்பை மீது நாங்கள் கண் வைத்து இருக்கிறோம். அதற்கு நிறைய நேரம் இருக்கிறது.

கண் வைத்து இருக்கிறோம்

கண் வைத்து இருக்கிறோம்

ஆனால் அதுவரை நிறைய ஆப்ஷன்களை முயன்று பார்ப்போம். சில சோதனை முயற்சிகளுக்கான முடிவுகள் உடனடியான வராது. ஆனால் அந்த முயற்சிகளை செய்ய வேண்டியது மிக அவசியம். அதை முயன்று பார்ப்போம், என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். அதன்படி அடுத்த உலகக் கோப்பை மீது கவனம் செலுத்த போகிறோம் என்று ரோஹித் வெளிப்படையாக அறிவித்து உள்ளார்.

சோதனை முயற்சி

சோதனை முயற்சி

அதுமட்டுமின்றி இந்திய அணியில் சோதனை முயற்சியாக சில விஷயங்களை செய்வோம். சிலவற்றிற்கு உடனே ரிசல்ட் வராது. ஆனால் முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார். இதனால் இந்திய அணியில் ரோஹித் - டிராவிட் முக்கியமான திட்டங்களுடன் இறங்கி உள்ளதாக தெரிகிறது. வரும் நாட்களில் பல இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

சோதனை முயற்சியாக பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்திய அணி பவுலிங் ஆல் ரவுண்டர்களை களமிறங்கி டெஸ்ட் செய்யும் வாய்ப்பும் உள்ளது. அதேபோல் இந்திய அணியில் சரியான பினிஷர் இல்லை. இதனால் வரும் நாட்களில் இந்திய அணி சில பினிஷிங் வீரர்களை வைத்து சோதனை செய்யும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது..

English summary

Ind vs NZ: Rohit Sharma gives hint about next world cup under his captaincy.

Story first published: Wednesday, November 17, 2021, 19:44 [IST]

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்

Enable

x

Read Entire Article