மாநில அரசுகளின் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு தேவை: சபாநாயகர் அப்பாவு அதிரடி

2 months ago 32

For Quick Alerts

Subscribe Now  

For Quick Alerts

ALLOW NOTIFICATIONS  

bredcrumb

Published: Wednesday, November 17, 2021, 20:44 [IST]

Google Oneindia Tamil News

சிம்லா: மாநில சட்டசபைகள் அனுப்பும் கோப்புகள், மசோதாக்கள் மீது ஆளுநர்கள் காலவரையின்றி முடிவெடுக்காமல் இருப்பதை தவிர்க்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தி உள்ளார்.

இமாச்சல பிரதேசம் சிம்லாவின் 82-வது சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார்.

பிரதமர் மோடி தமது உரையின் போது, ஜனநாயகம் என்பது இந்தியாவுக்கான வெறும் நடைமுறை அல்ல. ஜனநாயகம் இந்திய வாழ்க்கையின் அங்கமாக நமது இயல்பிலேயே ஊறியது என்றார். மேலும் சபைகளில் ஆண்டுக்கு 3-4 நாட்களை ஒதுக்கி, மக்கள் பிரதிநிதிகள் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தங்கள் வாழ்க்கையின் அம்சத்தை நாட்டுக்கு கூற முன்வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

 சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்... 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை - சூறாவளியும் வீசும் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்... 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை - சூறாவளியும் வீசும்

 தனி விவாத நாள்

தனி விவாத நாள்

அத்துடன் சபைகளில் தரமான விவாதங்களுக்கான ஆரோக்கியமான நேரம், ஆரோக்கியமான தினம் ஒன்றை உருவாக்க வேண்டும். நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இணைக்கும் நாடாளுமன்ற நடைமுறைக்கு தேவையான தொழில்நுட்ப ஊக்கத்தை வழங்கும் ஒரே நாடு ஒரே சட்டமன்ற தளத்தை உருவாக்கலாம் என்ற யோசனையும் பிரதமர் மோடி முன்வைத்தார்.

 நிதிமன்றங்கள் தலையிட கூடாது

நிதிமன்றங்கள் தலையிட கூடாது

இம்மாநாட்டில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பங்கேற்று பேசுகையில், நமது அரசியல் சாசன அட்டவணை 10-வது பிரிவின் படி சபாநாயகரின் அதிகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை ஏற்க முடியாது. மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பும் கோப்புகள் மீது மாநில ஆளுநர்கள் காலவரையறையின்றி முடிவெடுக்காமல் இருப்பது விவாதத்திற்குரியது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

 ஆளுநருக்கு காலக்கெடு

ஆளுநருக்கு காலக்கெடு

சட்டசபைகள் நிறைவேற்றி அனுப்புகின்றன கோப்புகள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இது அவசியமானதாகும். அப்படியான மாநில அரசின் கோப்புகளை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்புகிற மரபு இப்போதும் இருக்கிறது. ஆனால் பொதுவாக ஆளுநர்கள் இந்த மரபுப் படி செய்வதில்லை. மேலும் எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்வது உள்ளிட்டவை சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான் என்றார்.

 தமிழக நிலவரம்

தமிழக நிலவரம்

7 தமிழர் விடுதலை தொடர்பாக மாநில அமைச்சரவை எடுத்த தீர்மானம் மீதும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் மீது ஆளுநர்கள் முடிவெடுக்காமல் இருப்பதை தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இத்தகைய தீர்மானங்கள், கோப்புகள் மீது ஆளுநர்கள் உரிய முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று அகில இந்திய அளவிலான சபாநாயகர்கள் மாநாட்டில் அப்பாவு வலியுறுத்தி உள்ளார். சபாநாயகர் அப்பாவுவின் பேச்சு பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

English summary

Tamilnadu Speaker Appavu has appealed for bringing a binding time frame for the State Governors to take decision on the States bill.

Story first published: Wednesday, November 17, 2021, 20:44 [IST]

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்

Enable

x

Read Entire Article